எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான புதிய இணையத்தளம் செயலிழப்பு-ஹர்ஷ டி சில்வா
புதிய இணைப்பு
எரிபொருள் டோக்கன் பதிவு இணையதளம் மீண்டும் வழமைக்கு திரும்பி உள்ளது.
இதற்கமைய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வாகன இலக்கம் என்பவற்றை தற்போது ஒன்லைனில் பதிவு செய்து டோக்கனை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு வாகனத்திற்கு வாரத்துக்கு இரு தடவை டோக்கன் முறை மூலம் எரிபொருள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
எரிபொருள் பெற்றுகொள்வதற்காக இன்று (16) அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளம், வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே செயலிழந்துள்ளது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடிக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை தீர்வு வழங்கும் வகையிலே இந்த இணையத்தளம் இன்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Looks like the #SriLanka fuel pass platform built by @icta_srilanka is no longer working; only a couple of hours after launch. @sanjiva @harsha_suba @harshap @ManoSeky and many other top IT guys… what’s going on? #SriLankaCrisis pic.twitter.com/HEOTkOzVcM
— Harsha de Silva (@HarshadeSilvaMP) July 16, 2022
தொடர்புடைய செய்தி
எரிபொருள் கொள்வனவு செய்ய புதிய நடைமுறை: பதிவு செய்யும் முறை தொடர்பில் முக்கிய அறிவித்தல் |



