இறுதி கட்டத்தில் சம்பந்தனை முறிக்க முடியவில்லை! அம்பலமாகும் உண்மைகள் பல (Video)
தமிழ் தேசிய தரப்புக்கள் நிரந்தமாக ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டுமாக இருந்தால், இலங்கை அரசாங்கத்துடன் போச்சுவார்த்தையில் ஈடுபடுவது கட்டாயமாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்காக நிரந்த அரசியல் தீர்வு தொடர்பில், இன்று தமிழ் மக்களை பிரிதிநிதித்துவப்படுத்தி, தமிழ் தேசிய பரப்பில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டு நாடாளுமன்றில் இருக்கும் பிரதிநிதிகளுடன் தான் ரணில் அரசாங்கம் பேச முற்படுகின்றது என்றார்.
அத்துடன், இந்த பேச்சுவாரத்தைகளில் தமிழ் கட்சி தலைவர்கள், சம்மந்தனுடன் முரண்பட விரும்பாமல் உள்ளனர். சம்மந்தன் உடன் இறுதி கட்டத்தில் முகத்தை முறிக்கவோ அவருடன் பிரச்சினையில் ஈடுபடவோ விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை எமது "ஊடறுப்பு" நிகழ்ச்சியில் காணலாம்,

Veera Ep - 332: வள்ளியம்மாவிற்கு எதிராக வீரா எடுக்கும் முடிவு...வில்லதனத்தை ஆரம்பிக்கும் விஜி Manithan

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
