பெற்ற மகளை தவறாக வழிநடத்திய தாய்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
முல்லைத்தீவில் தனது பதின் அகவை மகளை தவறான முறையில் நடத்திய தாயாரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு (Mullaitivu) - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் தனது மகளை தவறான முறையில் கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த குற்றச்சாட்டில் தாயார் ஒருவரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
இதன்போது, இரண்டு பதின்ம வயது பெண்பிள்ளைகளை கொண்ட 32 வயதுடைய தாயாரே கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
கணவனை பிரிந்த நிலையில் வாழ்ந்து வரும் இவர் தனது 13 வயதுடைய மகள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை அவரை தவறான முறையில் தனது கைபேசியில் காணொளி எடுத்துள்ளார்.

இதனை சிறுமியின் தங்கையான 10 வயது சிறுமி கண்டு தனது சித்திக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட தாயார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதோடு தயாரிடம் இருந்த கைத்தொலைபேசி சான்று பொருளாக மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட தாயாரின் இரண்டு பிள்ளைகளையும் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி அறிக்கை பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறும் கைதுசெய்யப்பட்ட தயாரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், தற்போது இரண்டு சிறுமிகளும் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அவர்களின் சித்திகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri