காத்தான்குடியில் துப்பாக்கியால் பெண்ணை தாக்கி கொள்ளை: பொலிஸார் விசேட நடவடிக்கை
காத்தான்குடி பிரதேசத்தில் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தி பெண் ஒருவரை தாக்கி 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்று 3 மணித்தியாளங்களில் சந்தேகநபரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய காத்தான்குடி அஹமட் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் அவுஸ்ரேலியாவில் உள்ள மௌலவி ஒருவரின் மனைவி சம்பவதினமான நேற்று (14) பகல் ஒரு மணியளவில் தனிமையில் இருந்துள்ள நிலையில் வீட்டினுள் கை தப்பாக்கியுடன் நுழைந்த சந்தேகநபர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிபிரயோம் செய்து பெண்ணின் தலையில் துப்பாக்கியால் தாக்கி 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து தப்பி ஓடியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்த 32 வயதுடைய சித்தீக் சிபானியா என்ற பெண்ணை அயலவர்கள் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை
முன்னெடுத்ததுடன் துப்பாக்கி ரவைகள் மீட்டகப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்த
குறித்த சந்தேகநபரை சம்பவம் இடம்பெற்று 3 மணித்தியாலயத்தில் காத்தான்குடி
பகுதியில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கைது செய்யப்பட்டவர் காத்தான்குடியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் இவர் ஆரையம்பதி எல்லை பகுதியில் வசித்துவருபவர் எனவும் இவரிடம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக தகவல் - பாருக் சிஹான்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri