முல்லைத்தீவில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
முல்லைத்தீவு(Mullaitivu) - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் நீரிழ் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (11.04.2024) இடம்பெற்றுள்ளது.
தேவிபுரம் பகுதியை சேர்ந்த முனிசாமி திருச்செல்வம் என்ற 57 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியிலுள்ள பாலத்திற்கு கீழ் காணப்படும் நீர் நிலையொன்றில் வழமை போல் நீராட சென்ற நிலையில்அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு இன்றையதினம் (12.04.2024) சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
