இலங்கையில் பாரியளவிலான நூதன மோசடி..! சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
'லங்கா கார் வேர்ல்ட்'(Lanka Car World) என்ற பெயரில் நடாத்தப்பட்ட பாரிய அளவிலான நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர்கள், 'லங்கா கார் வேர்ல்ட்' என்ற பெயரில் வலைத்தளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வாகனங்களை விற்பனைக்கு விளம்பரப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு பணம் கட்டியவர்களை அவர்கள் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள்
இந்நிலையில், மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஹேவா தேவகே சஞ்சீவ உப்புல் விஜேரத்ன (NIC: 751752024V), ரணசிங்க ஹெட்டியாராச்சிகே டிஸ்னா இரோஷானி ரணசிங்க (NIC: 838491553V)
சந்தேக நபர்கள் பற்றிய ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு: 071-8594911 / 011-2398572
சிஐடி: 011-2320140 / 145
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

