போதைப்பொருள் பாவனைக்கு எதிராக வவுனியா இளைஞர் எடுத்துள்ள முயற்சி
வவுனியா (Vavuniya) சமயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதையில் இருந்து இளம் சந்ததியை காப்பாற்றுவோம் என்ற தொனிப் பொருளோடு வட மாகாணத்தை சுற்றி நடைபயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அவர் குறித்த நடைபயணத்தின் நேற்றைய தினம் (03.06.2024) ஆரம்பித்து முல்லைத்தீவு (Mullaitivu) நகரை வந்தடைந்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மரம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து ஒரு வருடங்களாக சிகிச்சை பெற்ற ரோஷன் என்கின்ற இளைஞரே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளார்.
நடைபயணம்
இந்நிலையில், அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதன் ஊடாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களில் இருந்து இந்த எதிர்கால சந்ததியை பாதுகாக்க கோருவதே குறித்த நடைபயணத்தின் நோக்கமாகும்.
இதன்போது, இளைஞர், வவுனியா நகரத்தின் மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்து நேற்று மாலை முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளார்.
மேலும், இன்று ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வழியாக ஓமந்தையை சென்றடைந்து நடைபவணியானது நிறைவடையும் என குறித்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










