யாழில் அதிகமாக போதைப் பொருள் பாவித்ததால் ஆணொருவர் உயிரிழப்பு
யாழில் அதிகமாக போதைப் பொருள் பாவித்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய விஜயராசா நிரஞ்சன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் உடுவில் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இந்த நிலையில் அவர் இன்று(26.10.2023) காலை கழிப்பறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் திரும்பி வராத நிலையில் தாயார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தவேளை அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின்படி அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும் அவரது வீட்டிலும் போதைப்பொருள் ஏற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
