கொழும்பில் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரால் நடத்தப்பட்ட ஆடம்பரமான பாலியல் தொழில் விடுதி

Colombo
By Vethu Feb 19, 2023 03:48 AM GMT
Report

கொழும்பில் கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவரால் நடத்தப்பட்ட ஆடம்பரமான பாலியல் விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அங்கு, இந்தோனேசிய பெண் உட்பட இரண்டு பெண்கள் மற்றும் அதன் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து பெண்களை சுற்றுலா விசாவில் இலங்கைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில்  ஈடுபடுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டில், இந்த மோசடியை நடத்தி வரும் கோடீஸ்வர வியாபாரிக்கு பணம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்ட கருத்தடை மாத்திரைகள், பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் வங்கி ரசீதுகள் ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டி மல் வீதியிலுள்ள ஆடம்பரமான இரண்டு மாடி வீடொன்றில் வெளிநாட்டுப் பெண்களை பணத்திற்காக விற்பனை செய்யும் இரகசிய வியாபாரம் ஒன்று இடம்பெறுவதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை முகவராக நியமித்து அங்கு தங்கியிருந்த இந்தோனேசியப் பெண்ணொருவரை பத்தாயிரம் ரூபாவிற்கு அழைத்துச் சென்ற பொலிஸ் குழு சில நொடிகளில் சுற்றிவளைப்பை நடத்தியது. கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆயுர்வேத மசாஜ் சென்டரில் வேலை வாங்கித் தருவதாகவும், விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று பலவந்தமாக பணத்துக்கு விற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வெயங்கொடை வசிப்பிட முகாமையாளர் இந்த மோசடியை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகரின் வங்கிக் கணக்கில் தினமும் 55000 ரூபாவை வரவு வைத்துள்ளார் என்பது அங்கு கிடைத்த வங்கி ரசீதுகளின் மூலம் தெரியவருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கட்டிடம் மாதாந்த வாடகை அடிப்படையில் மூன்று இலட்சம் ரூபாவிற்கு கோடீஸ்வர வர்த்தகரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த பாலியல் தொழில் நிலையத்திற்கு அரசியல்வாதிகள் மட்டுமின்றி உயர்மட்ட பிரமுகர்களின் ஆதரவுகளையும் பெற்றுக் கொள்வதற்காக தொடர்ந்து வருவது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோடீஸ்வர தொழிலதிபர் இதற்கு முன்னர் கல்கிஸ்ஸயில் ஆடம்பர வீடு ஒன்றை வாங்கி வெளிநாட்டு பெண்களின் அனுமதியின்றி பாலியல் தொழில் நடத்தியதற்காக ஏழு வெளிநாட்டு பெண்களுடன் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US