இலங்கையில் இருந்து விஜய்க்கு பறந்த கடிதம்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள, தவெகவின் தலைவர் விஜய்க்கு ஈழத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அ. அடைகலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. பிரேமசந்திரன், சமத்துவ கட்சியின் பொதுச்செயலாளர் மு. சந்திரகுமார், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் ச. நவீந்திரா (வேந்தன்) ஆகியோர் இந்த வாழ்த்து கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
குறித்த வாழ்த்து செய்தி அடங்கிய கடிதத்தில் மேலும், தமிழ்நாடு முதலமைச்சராக தாங்கள் பதவியேற்றமைக்கும், தங்கள் தலைமையில் மலரும் ஆட்சி எதிர்காலத்தில் சிறப்பாகவும் சுபீட்சமாகவும் அமைய வேண்டும்.
ஈழத் தமிழர்கள் சார்பில் வாழ்த்து
எம்மக்களின் விடுதலைக்காக தம்முயிர் நீத்து போராடிய பல தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்த பாரிய கூட்டணியாக ஈழத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்த 48 மணிநேரத்திற்குள் வலுவிழக்கும் குறைந்த காற்றழுத்தம்! கடும் மழைவீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை
மேலும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க நீண்ட காலமாக போராடி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கு தமிழகம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்தது போலவே தங்களது ஆட்சியிலும் ஆதரவு வழங்குவீர்கள் என்று பெரும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
தங்கள் ஆட்சி சிறப்பாக மலர மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You may like this..