யாழ். நாவந்துறையில் வீடொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
யாழ்ப்பாணம்(Jaffna) நாவந்துறை பகுதியில் வீடு ஒன்றில் மின் ஒழுக்கில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக வீட்டின் மேல்தளம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து சம்பவமானது இன்று(27.06.2024) காலை இடம் பெற்றுள்ளது.
இதன்போது, வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்று வந்து திரும்பி பார்த்த வேலை வீடு முற்றாக எரிந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
வீடு எரிந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு தண்ணீரைக் கொண்டு தீ பரம்பலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தீப்பரவலில் வீட்டின் மேல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த 10 இலட்சத்துக்கும் மேல் பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri