யாழ்ப்பாணத்தில் இ.போ.ச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு(Photos)
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை ஊழியர்கள் மேற்கொண்ட பணிபகிஷ்கரிப்பானது நாளைய தினமும் தொடருமென தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள்ளே வெளியில் இருந்து வருகின்ற பேருந்துகள் இன்று(24) உள்நுழையாதவாறே தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
தொடரும் பணி பகிஷ்கரிப்பு
இலங்கையின் போக்குவர்த்து சபையின் ஊழியர்கள் தாக்கப்பட்டமைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணமாகவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றுமுன்தினம் (22) இரவு 9 மணியளவில் புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை ஊழியர்களால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை நடத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியே இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை ஊழியர்கள் இந்த பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் தரித்து நின்று பயணிகளை ஏற்றும் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.
நாளை பெரும் அசௌகரியம்
பேருந்துகள் பயணிப்பதற்காக வந்த பொதுமக்கள் இன்றைய தினம் பேருந்து இல்லாமல் காத்திருப்பதையும், பெரும்பாலானவர்கள் தனியார் பேருந்துகளிலும் பயணித்துள்ளனர்.
எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் நாளைய தினம்(25) சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினமும் யாழ்.மாவட்டத்தில் பொது போக்குவரத்து பெரியளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிக செய்தி: தீபன்
போராட்டகாரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம்:எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் |