கிளிநொச்சியில் இடம்பெற்ற கலைஞர்கள் ஒன்று கூடல் நிகழ்வு
கிளிநொச்சியில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய கலைஞர்கள் ஒன்று கூடலும், அனுபவ பகிர்வு நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (03.04.2024) நடைப்பெற்றுள்ளது.
அனுபவ பகிர்வு நிகழ்வு
பிரதேச செயலாளர் த. முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வேர்கள் வான் நோக்கின கவிதை நூல் தொடர்பில் வட்டக்கச்சி வினோத் , நஞ்சாகும் நிலம் சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பு நூலின் அனுபவம் தொடர்பில் ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன் இப்படியொரு காலம் ஊரின் கதைகள் நூல் தொடர்பில் எழுத்தாளர் கருணாகரன் அவர்களும், காடுலாவு காதை நாவல் பற்றி தமிழக்கவி அவர்களும் அனுபவ பகிர்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
சிறப்பாக இடம்பெற்ற இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த கலைஞர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.