மகிந்தவை கொலை செய்வதற்கு சாதகமான சூழல்: அநுர அரசின் நடவடிக்கை தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவா 116 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளார்கள் என சந்தேகம் எழுவதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், அரசியல் பழிவாங்களுக்காகவே பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு மனோஜ் கமகே குறிப்பிட்டார்.
116 பேரின் சேவை
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை அரசாங்கம் சடுதியாக குறைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு நிமித்தம் சேவையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களில் 116 பேர் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலை புலிகள் காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்தவர்கள் இவ்வாறு சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த செயற்பாடு மகிந்த ராஜபக்சவை படுகொலை செய்வதற்காவா அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது? என்ற சந்தேகம் எழுகிறது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
