ஐரோப்பா செல்ல எதிர்பார்த்தவர்களை ஏமாற்றிய கும்பல்
காலி மஹா மோதர வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகக் கிளையின் ஒரு பகுதி என கூறி கீழ்மாடியில் இயங்கும் அலுவலகம் மூலம் வெளிநாட்டு வேலைகள் வழங்கப்படுவதாக தெரிவித்து பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
காலி வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகக் கிளை என்பது போல் ஒரே பெயர் பலகையில் இயங்கி வரும் இந்த அலுவலகத்தில் இருந்து வெளிநாட்டு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமானோர் வெளிநாட்டு வேலை தேடி வந்துள்ளனர்.
![தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் குழப்பம்! மாவையை கடும் தொனியில் எச்சரித்த சாணக்கியன்](https://cdn.ibcstack.com/article/0ee3f433-8121-4b04-bea4-12b464503d6d/24-675d336a7bdad-sm.webp)
தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் குழப்பம்! மாவையை கடும் தொனியில் எச்சரித்த சாணக்கியன்
செலுத்தப்பட்ட பணம்
அலுவலகத்திற்கு வந்த பின்னர், அங்குள்ள அதிகாரிகள் இரண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பணம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதற்கமைய, 258 பேர் தலா 175,000 ரூபா வீதம் ருமேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்புக்காக, முகவர் நிறுவனங்களுக்குச் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், உடனடியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு 4 லட்சம் ரூபாய் வரை செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாடு
அவர்களில் எவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு பரிந்துரைக்கப்படவில்லை. வேலை கிடைக்கவில்லை என அடிக்கடி போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில் அதற்கு மத்தியிலும் சிலருக்கு ஒரு லட்சம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வேறு பல நாடுகளில் வேலை வழங்குவதாக கூறப்பட்டு, முகவர் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை தொடர்பு கொள்ள சிங்கள ஊடகம் ஒன்று முயற்சித்த போது, அவரது தொலைபேசிக்கு பதிலளித்த அவரது தனிப்பட்ட உதவியாளர் சங்க பண்டார, மனுஷ நாணயக்கார தற்போது ஊடகங்களுக்கு பதிலளிக்க மாட்டார் என தெரிவித்தார்.
![தமிழினம் கடந்த பாதையும்... கடக்க வேண்டிய பாதையும்....](https://cdn.ibcstack.com/article/106c411c-228c-4499-aa72-84b1d87e118e/25-6793a77ca4fe1-md.webp)