வெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள நிலைமை குறித்து நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
இதன்படி அடுத்த 48 மணித்தியாலங்களில் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த கண்டி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடா கங்கை மற்றும் மகுர கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
இதேவேளை தற்போதைய மழை நிலைமை காரணமாக பாதுக்கை நகரின் ஊடாக பாயும் புஸ்செலிய ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுக்கை நகருக்கு செல்லும் இரண்டு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதுக்கை ஹங்வெல்ல வீதியும் பாதுக்கை இங்கிரிய வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக பாதுக்கை நகரில் உள்ள பல தாழ்வான வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தொடர் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன இடைத்தங்கல் பகுதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |