யாழில் நடந்த பயங்கரம் - பெண்ணொருவரை உயிருடன் எரித்த நபர்
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை தீ மூட்டி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில் இந்த பயங்கரம் நேர்ந்துள்ளது.
குறித்த பெண்ணை அழைத்து வந்த நபர் ஒருவர் அவரை தீ மூட்டி கொழுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ வைக்கப்பட்ட பெண்
சாவகச்சேரியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார்.

சம்பவத்தை பார்த்த ஊர் மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தீயை அணைத்து குறித்த பெண்ணை அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் மீது தீ மூட்டப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Bigg Boss: இரண்டாவது எவிக்ஷனில் இன்று வெளியேறுவது யார்? எவிக்ஷன் கார்டை காட்டிய விஜய் சேதுபதி Manithan
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam