பிரித்தானியாவின் உயர் பாதுகாப்பு நிறுவனத்தில் தீ விபத்து!
பிரித்தானியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான BAE சிஸ்டம்ஸில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய(United Kingdom) பன்னாட்டு விண்வெளி பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு நிறுவனமாக BAE சிஸ்டம்ஸ் இயங்கி வருகிறது.
அந்த வகையில் தீ விபத்தினை அந்நாட்டு தீயணைப்புக் குழுவினரும் பொலிஸாரும் கட்டுப்படுத்தியதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்
BAE சிஸ்டம்ஸ் ஐரோப்பாவின் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களில் ஒன்றாகும்.
அதன் துணை நிறுவனமான பாரோ-இன்-ஃபர்னஸைத்(Barrow-in-Furness) பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் அணுசக்தி நிலையங்களுக்கு ஆபத்து இல்லை என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், புகையை சுவாசித்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |