அம்பாறையில் தந்தையால் மகளுக்கு நேர்ந்த சோகம்
தனது மகளை தகாத உறவுக்கு உற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்பாறையில் பதிவாகியுள்ளது.
அம்பாறை - பன்னல்கம பிரதேசத்தில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இறந்தவரின் மனைவி 6 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றுள்ளதாகவும், அக்காலப்பகுதியில் தந்தை தன்னை தகாத உறவுக்கு உற்படுத்தியதாக வெளிநாட்டில் உள்ள தனது தாயிடம் சிறுமி தெரிவித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸாரிடம் முறைப்பாடு
அதன்படி, இது குறித்து விடயம் தொடர்பில் பெண் தனது கணவரிடம் வினவிய நிலையில், சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்தால், குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக கணவன் மிரட்டியதாக அப்பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இந்த அச்சுறுத்தல் காரணமாக, சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தாய் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில், தகவல் கிடைத்ததும் உடனடியாக செயற்பட்ட தமன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது திடீரென வீட்டுக்குள் ஓடிய அந்த நபர், அங்கிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan