மரம் முறிந்து வீழ்ந்ததில் தந்தையொருவர் உயிரிழப்பு (Video)
விறகு வெட்டும் போது பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தலவாக்கலை - கிரேட்வெஸ்டர்ன் ஸ்கல்பா பிரிவில் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் செல்லத்துரை மணிமாறன் வயது 42 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
மரம் முறிந்து விழுந்ததால் மரணம்
தோட்ட நிர்வாகத்திற்குச் சொந்தமான இல.09 தேயிலை மலையில் விறகு வெட்டும் போதே பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
