கட்டுத்துவக்கு வெடித்து நான்கு பிள்ளைகளின் தந்தை பலி
திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான எம்.நஸார் (60வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம்
வீட்டிலிருந்து கட்டுத்துவக்குடன் சென்ற போது தான் கொண்டு சென்ற துவக்கு தானாகவே வெடித்ததில் காலில் காயம் ஏற்பட்ட நிலையில், அதிக இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், மரணம் தொடர்பில்
விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணை முடிவுற்ற பின்னர் உறவினர்களிடம்
சடலத்தை ஒப்படைக்க உள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
