திருகோணமலையில் முதலை தாக்கியதில் ஒருவர் பலி
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பித்திடல் பகுதியில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி பண்ணையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (03.12.2023) இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
தம்பலகாமம் - சிப்பித்திடல் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய கே.சசிகுமார் என்ற பண்ணையாளரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த பண்ணையாளர் நேற்று (03.12.2023) காலை கால்நடைகளை மேய்ப்பதற்காக பாலம்போட்டாறு பகுதியில் உள்ள ஊத்த வாய்க்கால் என்ற வாய்க்காலை கடந்து சென்றபோது காணாமல் போயிருந்ததாகவும், பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின்போது குறித்த நபரின் சடலம் நேற்று மாலை 04 மணியளவில் குறித்த நீர்நிலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மரணம் தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தம்பலகாமம் பகுதியில் உள்ள 45க்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் தங்களுடைய 1200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான மேய்சல் தரை இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி! சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆதங்கம் (Photos)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |