புடினின் poop suitcase! உடல் கழிவுகளை மாஸ்கோவிற்கு கொண்டு செல்லும் மெய்க்காப்பாளர்கள்
ரஷ்யா மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் இடையே அலாஸ்காவில் சமீபத்தில் நடந்த சந்திப்புடன், விளாடிமீர் புடினின் வெளிநாட்டுப் பயணங்களுடன் தொடர்புடைய ஒரு விசித்திரமான பாதுகாப்பு நடவடிக்கை மீண்டும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, அவர் வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செல்லும் போதெல்லாம் தனது மலத்தை சேகரிக்க ஒரு சிறப்பு கழிப்பறை மற்றும் ஒரு பையை எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் அதன் கவனத்தை செலுத்தியுள்ளன.
பாதுகாப்புக் குழு
புடினின் பாதுகாப்புக் குழு வெளிநாடுகளுக்குச் செல்லும்போது எடுத்துச் செல்லும் பல குண்டு துளைக்காத பைகளில் 'புப் சூட்கேஸ்' (Poop Suitcase) என்று அழைக்கப்படும் ஒரு சிறப்புப் பையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பயணத்தின் போது ஜனாதிபதியின் மலம் மற்றும் சிறுநீரின் மாதிரிகளைச் சேகரித்து அவற்றைப் பாதுகாப்பாக மாஸ்கோவிற்குக் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
இந்த அசாதாரண நடைமுறைக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம், புடினின் உடல்நலம் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதாகும்.
ஒரு நபரின் மலம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவரது உடல் ஆரோக்கியம், ஏற்கனவே உள்ள நோய்கள், உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை பற்றிய மிக முக்கியமான பல தகவல்கள் வெளிப்படும்.
புடினின் நோக்கம், அவரது போட்டி நாடுகள் அல்லது உளவுத்துறை சேவைகள் அவரது உடல்நலம் குறித்த எந்தத் தகவலையும் பெறுவதைத் தடுப்பதாகும்.
இந்த காரணத்திற்காக, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களின் போது அவரது உடல் கழிவுகள் அனைத்தையும் சீல் செய்யப்பட்ட பைகளில் அடைத்து ரஷ்யாவிற்கு கொண்டு வருகிறார்கள்.
புடினின் உடல்நிலை
இந்த செயல்முறையை முதலில் பிரான்ஸ் பத்திரிகையொன்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் இரண்டு நிருபர்கள், 2017 இல் புடினின் பிரான்ஸ் வருகையின் போதும், 2019 இல் சவுதி அரேபியாவிற்கு அவர் சென்றபோதும் இந்த முறை கடைபிடிக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
குறிப்பாக 2022 உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து ஜனாதிபதி புடினின் உடல்நிலை குறித்த ஊகங்கள் பரவலாக உள்ளன.
அவர் புற்றுநோய் அல்லது பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன. ஆனால் கிரெம்ளின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளமை குறிப்பிட்டுள்ளது.





Viral Video: உலகத்துல இப்படியொரு சிறிய டிசைனரை பார்த்திருக்கவே மாட்டீங்க... தங்கைக்கு வடிவமைத்தை ஆடையைப் பாருங்க Manithan
