முல்லைத்தீவில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட வயோதிபர்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வயோதிபர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(28.10.2023) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 71 வயதையுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் 31 வயதையுடைய இராணுவத்தில் பணியாற்றும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கிராமத்தில் இராணுவத்தினரின் முகாமில் இருந்து அகற்றப்படும் இருப்புகளை விற்பனை செய்து வந்துள்ளார்கள். அதனால் ஏற்பட்ட பண பரிமாற்றம் தொடர்பிலான பிரச்சினையால் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 31வயதையுடைய சந்தேக நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து குறித்த நபர் தடியால் 68 வயதையுடைய குடும்பஸ்தர் மீது சரமாரியாக தாக்கியுள்ளதுடன் காயமடைந்த குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
