வீட்டில் இருந்து வெளியே சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு
கேகாலை - தெரணியகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்வத்ததென்ன பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தெரணியகல, உடஹேன்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இவர் கடந்த திங்கட்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
தேடும் பணி
இதனால் இவரது குடும்பத்தினர் இவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பொல்வத்ததென்ன பிரதேசத்தில் வைத்து இவரது சடலம் நேற்று புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் குடும்பத்தினர் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 20 மணி நேரம் முன்

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri
