அனுராதபுரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொலை
அனுராதபுரத்தில் இனந்தெரியாத நபர்களால் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (11.08.2023) இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆர்.டி.சஞ்சீவ என்ற 41 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
கைது செய்வதற்கான விசாரணை
சிகை அலங்கார உரிமையாளரான குறித்த நபர், நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
அவ்வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர், வீட்டுக்குள் புகுந்து அவரைச் சுட்டுப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், கொலையாளிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |