கிளிநொச்சியில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் கண்காட்சி
கிளிநொச்சியில் (Kilinochchi) உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட வர்த்தக சந்தையும் விற்பனைக் கண்காட்சியும் இன்று (27.06.2024) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் கைத்தொழில் அமைச்சின் கீழ் குறித்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ். முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொழில் சந்தையினையும் கண்காட்சியினையும் ஆரம்பித்து வைத்தார்.
உள்ளூர் உற்பத்தியாளர்கள்
இதில் மாவட்ட பதில் அரச அதிபர் நளாயினி இன்பராஜ், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |