தாயை கொடூரமாக தாக்கிய மகன் - மனைவி, பிள்ளைகளுடன் தப்பியோட்டம்
மொனராகலையில் இரவு உணவு தயாரிப்பதற்காக மரத்திலிருந்த பலாப்பழத்தைப் பறித்த தாய் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொம்பகஹவெல பிரதேசத்திலுள்ள மகனின் காணியிலுள்ள மரத்தில் பலாப்பழம் பறித்த தாய் மற்றும் தந்தை மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்த தாய் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாய் மீது தாக்குதல்
குறித்த காணியை பிள்ளைக்கு தானமாக வழங்கிய பெற்றோர் மற்றுமொரு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரவு உணவு தயாரிப்பதற்காக மகனின் காணியிலுள்ள பலாமரத்திலிருந்து காய் ஒன்றை பறித்துள்ளார். இதனால் கோபமடைந்த மகன் தனது தாயை பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மகன், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri