FACT CHECK - யால சரணாலயத்தில் 103 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகள்
யால சரணாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு முகப்புத்தக வலைதளத்தில் சிங்கள மொழி தலைப்புடன் வெளியிடப்பட்ட படங்கள் போலியானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி, அழிந்துபோன சிகிபில்லா (Chikibilla) எனப்படும் விலங்கு 103 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி குறித்த படங்கள் முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்டிருந்தன.
வடிவமைக்கப்பட்ட படங்கள்
இதன்போது, இருண்ட மரங்கள் நிறைந்த பகுதியில் நான்கு கால்கள் கொண்ட உயிரினங்களைக் காட்டுவது போன்று இந்தப்படங்கள் அமைந்திருந்தன.
இந்நிலையில், இலங்கை வனவிலங்கு நிபுணர்களால் இவ்வாறான ஒரு உயிரினம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த படங்கள் டிஜிட்டல் (Digital) முறையில் செம்மைப்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |