விரைவில் முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் – ரோஹித அபேகுணவர்தன
விரைவில் முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் விஜயத்தின் பின்னர் முழுமையான அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மீளவும் அமைச்சுப் பதவிகள்
கடந்த காலங்களில் சிறந்த முறையில் செயற்பட்ட அமைச்சர்களுக்கு மீளவும் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்களை உரிய முறையில் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னர் வகித்த பதவிகள் மீளவும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
துறைமுக அமைச்சராக கடமையாற்றிய போது தாம் பல்வேறு பணிகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனம்
எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் சொல்லப்படும் விடயங்களை நாட்டின் தலைவர் செய்ய முற்பட்டால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது போகும் என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அங்கும் இங்கும் சென்று அரசாங்கத்தை விமர்சனம் செய்து வருவதாகவும் பிரதமர் பதவி வழங்கப்பட்ட போது அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.