எண்ணிய பணத்தை எடுத்துச் செல்லுங்கள்..! சீனாவில் புதுமையான கொடுப்பனவு
சீன கிரேன் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ஆண்டு இறுதி ஊக்குவிப்பு பணமாக 11 மில்லியன் டொலர்களை, வழங்கியுள்ளது.
இது இலங்கை ரூபாயில் 70 கோடிக்கும் அதிகமான தொகையாகும். எனினும் இந்த ஊக்குவிப்பு பணத்தை வழங்கும் போது குறித்த நிறுவனம் 15 நிமிடங்கள் என்ற கால வரையறையை வழங்கி, அதற்குள் ஒருவர் எண்ணக்கூடிய அளவான பணத்தை அவர் வீட்டிற்கு எடுத்துச் செல்லாம் என்ற நிபந்தனையை விதித்ததாக கூறப்படுகிறது.
காலவரையறை
இதன்படி, ஹெனான் மைனிங் கிரேன் கோ. லிமிடெட்டில், பணம் மேசையில் வைக்கப்பட்டது.

இதனையடுத்து, ஊழியர்கள் தம்மால் 15 நிமிடங்களுக்குள் எண்ணக்கூடிய பணத்தை எடுத்துக்கொள்வதை காட்டும் காணொளிக்காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இதன்போது, அதிகமாக ஒரு ஊழியர் ஒரு இலட்சம் யுவான்களை எண்ணி முடித்து வீட்டுக்கு எடுத்துச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாயில் 12.07 இலட்சமாகும்.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        