வர்த்தகர் ஒருவரின் சட்டவிரோத செயல்!பொலிஸாருக்கு அறிவிக்காமல் வெளிநாடு செல்ல அனுமதி
தோட்டாக்களுடன் வெளிநாடு செல்வதற்கு முயற்சித்த வர்த்தகர் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தகவலொன்று வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த வர்த்தகர் 50 தோட்டாக்களுடன் வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தமை தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத செயல்
கடந்த மாதம் 29ஆம் திகதி சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 9 மில்லிமீற்றர் ரக 50 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தகரிடம் காணப்பட்ட தோட்டாக்களை வைத்திருப்பதற்கான அனுமதி பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் சென்ற அவரது சாரதியிடம் தோட்டாக்களை கையளித்து விட்டு அவர் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை என நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அறிவிப்பு
இந்த விடயம் தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பீ.ஏ.ஜயகாந்த நேற்று அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரைவில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை துப்பாக்கிகளுக்கு வழங்கப்படும் அனுமதி பத்திரங்களுக்கு அமைய 10 தோட்டாக்களை மாத்திரமே ஒருவர் வைத்திருக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் எந்தவொரு அதிகாரியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
