டக்ளஸ் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகள் தொடர்பில் சாட்சியங்கள் பகிரங்கம்!
ஈ.பி.டி.பி யின் கொள்கைகள் தொடர்பில் முரண்பட்டமையால் தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் படுகொலை செய்யப்பட்டதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் பொன்னையா சதா தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''ஈ.பி.டி.பி யின் கொள்கைகள் தொடர்பில் முரண்பட்டமையால் தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் படுகொலை செய்யப்பட்டார்.
ஆனால் அவரை கொலை செய்த பழியை விடுதலைப் புலிகளின் தலையில் கட்டி விட்டனர்.
இந்த படுகொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தால் மேலும் பல படுகொலைகள் தொடர்பில் சாட்சியமளிப்பேன்.''என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ள முழுமையான கருத்துக்களை இந்த காணொளியில் காணலாம்...,
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri