இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது: ரவிகரன் ஆதங்கம்
இலங்கை அரசாங்கத்தை போல் இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
சாந்தனின் இறப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்தியா தீர்வை எமக்கு தருவதெனில் எப்போதே தந்திருக்க வேண்டும். தீர்வு விடயத்தில் நழுவல் போக்கிலையே இருக்கின்றது.
சிறைச்சாலையில் இருந்த சாந்தன்
அவர்களால் அறிவிக்கப்பட்ட மாகாணசபை என்பது கூட இன்றுவரை இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்காமல் அரசாங்கத்தின் போக்கிலேயே விட்டுக்கொடுக்கும் நிலைதான் காணப்படுகின்றது.

இதற்கமைய மாகாண சபை இன்று இல்லாத நிலையில் தான் காணப்படுகின்றது. அதேபோல் தான் சிறைச்சாலையில் இருந்த சாந்தன் அவர்களுடைய இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சம்பவம்.
மேலும், இறுதியாக எழுதிய கடிதம், தாய் அதற்காக போராடிய விடயங்கள் இவ்வளவு காலமும் சிறையில் வைத்திருந்து போராடிய தியாகியை இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கலாம்.
அந்த ஆசையை கூட நிறைவேற்றாமல் கொடூர வேலையை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே எங்களுக்கு செய்வது போல் இந்திய அரசாங்கமும் இவ்விடத்தில் செய்திருக்கின்றது.”என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri