அமெரிக்க தலைநகரில் குண்டு வெடிப்பு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் புறநகர் பகுதியான ஆர்லிங்டனில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துப்பாக்கி சத்தம் கேட்ட வீட்டுக்குள் பொலிஸார் நுழைந்து சோதனை நடத்த முயற்சித்த போது வீட்டுக்குள் இருந்த நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட வேளை திடீரென்று அந்த வீட்டில் குண்டு வெடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவல்
இதன் போது பயங்கர சத்தத்துடன் பல அடி உயரத்துக்கு தீ கிளம்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சோதனை நடத்த சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதோடு வீட்டுக்குள் இருந்த நபர் உயிரிழந்தாரா? அல்லது தப்பி சென்றாரா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
மேலும், குண்டு வெடித்த வீட்டில் இருந்த நபர், வெடி மருந்துகளை பதுக்கி வைத்து இருந்து பொலிஸார் வந்ததும் அதை வெடிக்க வைத்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
