மதுபானசாலை அனுமதி பெற்றதாக ஆதரமில்லாத குற்றச்சாட்டு : அங்கஜன் விசனம்
மதுபானசாலை அனுமதியை நான் பெற்றதாக கூறிய சுதந்திர கட்சியின் செயலாளர் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்(Angajan Ramanathan) விசனம் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான கதைகளுக்கு பதில் சொல்லப்போனால் அவர்களது நிலைக்கு நாம் தரமிறங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(27.08.2024) நடைபெற்ற இளையோருடனான கேள்வி பதில் நிகழ்ச்சியொன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மதுபான சாலை விவகாரம் தொடர்பாக இம்முறை தேர்தலில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.
ஆதாரங்களற்ற விவாதங்களாகவே அவை காணப்படுகின்றன. தேர்தல் பிரசாரங்களில் ஒருவரை ஒருவர் சேறுபூசும் தன்மை காணப்படுகின்றது.
எனது சுதந்திரக் கட்சியின் செயலாளர் தனிப்பட்ட நோக்கங்களுக்காக, நான் எனது மக்களுக்காக ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டேன் என்ற அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் இருக்கும் அரசியல் மேடையில் இதனை தெரிவித்தார்.
ஆதாரம்
நானே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரே நாடாளுமன்ற உறுப்பினர். நான் போகும் இடமே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செல்லும் இடமாக பார்க்கப்படும். அவருடைய தேவை என்னை ஒரிடத்தில் சேர்க்கவேண்டும் என்று இருந்தார்.சேராத இடத்தில் இவ்வாறு கதைகள் வருகிறது.
ஆனால் அதற்கு எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இவ்வாறான கதைகளுக்கு பதில் சொல்லப்போனால் அவர்களது நிலைக்கு நாம் தரமிறங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |