சஜித் - அனுரவை ஜனாதிபதி ஆக்குவதில் முக்கிய நாடு கலக்கத்தில்..!
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவை தெரிவு செய்வதில் இந்தியா குழப்ப நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு உள்ளூர் ரீதியாக ஆதரவு இல்லாத பட்சத்தில் இந்தியா இரண்டாவது தெரிவாக சஜித் பிரேமதாசவை விரும்பக்கூடும்.
எனினும் சஜித் பெருமளவில் இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ளாத போதும் அவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாச இந்தியாவுக்கு எதிரான பாரிய எதிர்ப்புவாதியாக இருந்துள்ளார். ஆகவே சஜித்தை ஜனாதிபதி ஆக்குவதில் பாரிய சிக்கல் தன்மை காணப்படுகின்றது.
இந்நிலையில், அநுரகுமார திசாநாயக்க இந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற விம்பம் பொதுசன அபிப்பிராயங்கள் மூலம் கடந்த காலங்களில் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த விடயங்கள் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளை சற்று யோசிக்க வைத்தது. இதன் காரணமாகவே மேற்குலக நாடுகள் அநுர குமாரவுக்கான வெளிநாட்டு அழைப்புக்களை கடந்த மூன்று மாதங்களுக்கு முதல் மேற்கொண்டிருந்தன.
எனினும் கடந்த சில காலங்களில் அதற்கான தேவை அவசியமற்றது என்பதை அந்நாடுகள் விளங்கிக் கொண்டன. எனினும் தேர்தல் பிரசாரங்களில் ஜேவிபியினர் உடனான கூட்டங்களில் அதிகளவானோர் இடம்பெற்றிருந்தாலும் அவை வாக்குகளாக மாறிவிட முடியும் எனவும் கூற இயலாது.
ஆகவே, தேர்தல் தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் பல விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 38 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
