மட்டக்களப்பில் வெட்டி வீழ்த்தப்பட்ட 400 வருடங்கள் பழமை வாய்ந்த மரம் (Video)
மட்டக்களப்பு நகரில் சர்ச்சைக்குள்ளான 400 வருடங்கள் பழமை வாய்ந்த மரம் நேற்று(16) வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் ஒல்லாந்தர் காலத்தில் நாட்டப்பட்டதாக கூறப்படும் 400 வருடங்கள் பழமை வாய்ந்த மரம் அண்மை காலமாக பல சர்ச்சைக்குள்ளாகி வந்துள்ளது.
இந் நிலையில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் ,பள்ளிவாசல் தொழுகைக்கு வருபவர்களுக்கு மத்தியில் அச்சுறுத்தலாக காணப்பட்ட மரம் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கை
குறித்த மரம் தொடர்பாக பொதுமக்கள் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியோரின் உரிய அனுமதியுடன் விதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை அரச மரக்கூட்டுதாபணத்தின் ஒத்துழைப்புடன் குறித்த மரம் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது.