யாழில் உடையில் தீ பற்றியதால் 95 வயது முதியவர் உயிரிழப்பு
யாழில் தவறுதலாக உடையில் தீ பற்றியதால் முதியவர் ஒருவர் நேற்றையதினம் (02) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பட்டினசபை வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த 95 வயதுடைய மா.சின்னமணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முதியவர் உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் கடந்த 26ஆம் திகதி அன்று சுருட்டு புகைப்பதற்கு பற்றவைத்த தீக்குச்சியை தவறுதலாக அவர் அணிந்திருந்த ஆடையில் போட்டவேளை தீப்பற்றியதில் அவர் தீக்காயங்களுக்கு உள்ளானார்.

பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (02) மாலை உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri