மசூதி வளாகத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்ட இஸ்ரேலிய அரசியல்வாதி - தொடரும் சர்ச்சை
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர், ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குச் சென்று அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது மத்திய கிழக்கின் மிகவும் உணர்திறன் வாய்ந்த இடத்தில், பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள ஒரு ஏற்பாட்டை மீறுவதாக பலஸ்தீன தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
பலஸ்தீன மக்களுக்கு எதிராக
அவரது வருகையின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள யூதர்களால் டெம்பிள் மவுண்ட் என்று அழைக்கப்படும் வளாகத்தில் பென்-க்விர் யூதர் பிரார்த்தனைகளை வழிநடத்துவதைக் காட்டுகின்றன.
Israeli Minister of National Security Itamar Ben Gvir sparked fresh outrage today after performing Talmudic rituals inside the Al-Aqsa Mosque compound, accompanied by an associate who carried out the “epic prostration”, a form of Jewish worship explicitly prohibited at the site pic.twitter.com/pv3aKSaJvc
— Middle East Eye (@MiddleEastEye) August 3, 2025
யூதர்கள் அந்த இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பிரார்த்தனை செய்ய முடியாது.
இந்த நிலையில், இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் இது தொடர்பில், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அங்கு முஸ்லிம் வழிபாட்டை மட்டுமே அனுமதிக்கும் தற்போதைய ஒப்பந்தத்தைப் பராமரிக்கும் இஸ்ரேலின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளது.
ஹமாஸ் இதனை, பலஸ்தீன மக்களுக்கு எதிராக நடந்து வரும் ஆக்கிரமிப்புகளை ஆழப்படுத்தும் செயல் என்று கூறியுள்ளது.
மத்திய கிழக்குப் போரில் ஜோர்தானிடமிருந்து
அதே நேரத்தில் பலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் பேச்சாளர், இஸ்ரேலிய அமைச்சரின் இந்த வருகை அனைத்து சிவப்புக் கோடுகளையும் தாண்டிய செயல் என்று கூறியுள்ளார்.
இந்த இடம் யூதர்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது.
இது இரண்டு பைபிள் கோயில்களின் தளமாகும். அதேநேரம், இது நபிகள் நாயகம் சொர்க்கத்துக்கு ஏறிய இடம் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்குப் போரில் ஜோர்தானிடமிருந்து இஸ்ரேலால் இந்த தலம் கைப்பற்றப்பட்டது.
தற்போதைய நிலைமையின் கீழ், ஜோர்தான் இந்த இடத்தின் பாதுகாவலராக அதன் வரலாற்றுப் பங்கைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் திருவிழா




