ஒரு மணித்தியாலத்தில் இலங்கையில் பதிவாகும் கோவிட் மரணங்கள்
மணித்தியாலம் ஒன்றுக்கு கோவிட் பெருந்தொற்று காரணமாக ஒன்பது பேர் இலங்கையில் உயிரிழக்கின்றனர்.
சராசரியாக ஒரு மணித்தியாலத்தில் ஒன்பது பேர் வரையில் கோவிட் காரணமாக மரணிக்கின்றனர் என குறிப்பிடப்படுகின்றது.
நேற்று முன்தினம் கோவிட் பெருந்தொற்று காரணமாக 209 பேர் உயிரிழந்திருந்தனர்.
நாட்டில் இதுவரையில் பதிவான கோவிட் மரணங்களில் அதிகளவானவை 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 16ம் திகதி முதல் 25ம் திகதி வரையிலான காலப் பகுதியில் 1894 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இந்தக் காலப் பகுதியில் சராசரியாக மணித்தியாலம் ஒன்றில் 8 முதல் 9 பேர் வரையில் மரணிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
முதல் கோவிட் அலையில் 13 பேரும், இரண்டாம் கோவிட் அலையில் 596 பேரும், மூன்றாம் அலையில் 7548 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 8157 ஆக பதிவாகியுள்ளது.



