அடை மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்கள் பாதிப்பு!
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 234 குடும்பங்களை சேர்ந்த 766 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 58 குடும்பங்களை சேர்ந்த 204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 279 குடும்பங்களை சேர்ந்த 950பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் விபரம்
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 23 குடும்பங்களை சேர்ந்த 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 12 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 27பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 54 குடும்பங்களை சேர்ந்த 191பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 180 குடும்பங்களை சேர்ந்த 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழின் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள சன் டிவி ஆடுகளம் சீரியல் நடிகர்.. விஜய் டிவி சீரியல் நாயகியா? Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
