சம்பள கொடுப்பனவிற்காக அரச வருமானத்தின் 85 வீதம் செலவிடப்படுகின்றது – மஹிந்த அமரவீர
நாட்டின் மொத்த அரச வருமானத்தில் அரசாங்க ஊழியர் சம்பளக் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்காக 85 வீதம் செலவிடப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
தற்பொழுது ஆசிரியர்களின் சம்பளக் கொடுப்பனவிற்காக 119 பில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது, சபோதினி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இதற்கு இன்னும் 71 பில்லியன் ரூபா இதில் சேர்க்கப்பட வேண்டும். உண்மையில் இலங்கை போன்ற பொருளாதாரத்தை உடைய நாடொன்றில் அவ்வாறு செலவிட முடியாது.
ஒரே தடவையில் சமபள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்க கிடைத்தால் அது நல்லது நாமும் அதனையே விரும்புகின்றோம்.
எனினும் நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்திற் கொண்டே இந்த கொடுப்பனவு தொகையை வழங்கத் தீர்மானித்தோம்.
ஆசிரியர் அதிபர்களுக்கு இந்த சம்பள கொடுப்பனவு அதிகரிப்பு அறிவிக்கப்படும் போது வேறும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்து வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri