அமெரிக்காவில் மின்சாரம் இல்லாமல் சுமார் 84,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
அமெரிக்காவின் பல மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிப்புயல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் 84,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இன்றித் தவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாநில வாரியாக டெக்சாஸில் 43,000 நுகர்வோர்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அறிவுறுத்தல்
லூசியானாவில் 6,000 குடும்பங்கள், ஆர்கன்சாஸில் 5,000 குடும்பங்கள், கலிபோர்னியாவில் 4,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பனிப்பொழிவு மற்றும் கடும் காற்று காரணமாக, பழுதடைந்த மின் கம்பிகளைச் சீரமைப்பதில் ஊழியர்களுக்குப் பெரும் சவால்கள் நீடிக்கின்றன.

பனிப்புயல் இன்னும் ஓயாததால், மின் விநியோகக் கட்டமைப்பிற்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
இந்த நிலையில்,அவசரக்காலப் பிரிவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.