இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் கறுப்பு ஜீலை நினைவேந்தல் - போராட்டம்
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் லண்டனில் முன்னெடுக்கப்பட்டன.
நேற்று (23.07.2026) லண்டனில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
பலரின் பங்கேற்பு
1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து ஈழதமிழ்மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன், நீதிக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளை ஏந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும், பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலதிக தகவல் - சண்முகம் தவசீலன்
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan