டக்ளஸ் தேவானந்தா விமானத்தை கடத்த போட்ட திட்டம்! வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள்
வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விமானத்தில் தன்னை அழைத்து சென்ற போது அந்த விமானத்தை கடத்துவது தனது நோக்கமாக இருந்ததாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த விடயத்தை அரசியலாக்கி மக்கள் நலன் சார்ந்து செயற்பட எத்தனித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், சகல ஆயுதங்களையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் தாம் பாலஸ்தீனத்திலே பயிற்சி பெற்றதாகவும் விமானத்தை கடத்துவதற்கான திறமை தனக்கு இருந்ததாகவும் டக்ளஸ் சுட்டிக்காட்டினார்.
தன்னோடு விமானத்தில் இருந்த கைதி இந்த விடயத்தை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தாம் 1983 ஆம் ஆண்டு சிங்கள காடையர்களாலும், 1998 மற்றும் 1999 ஆம் தமிழ் காடையர்களாலும் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அத்தோடு, இந்தத் தாக்குதல் சம்பவம் அரசியல் உந்துதலோடு இடம்பெற்றதாகவும் சில அமைச்சர்களின் பெயர்களும் இதன்போது குறிப்பிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை அவர் வழங்கிய நேர்காணலில் காணலாம்.
பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் தேவேந்திரமுனை பெரஹர - குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள்