ஓமந்தையில் மடத்துவிளாங்குளம் உடைப்பு
ஓமந்தை (Omanthai)- பாலமோட்டை பகுதியில் அமைந்துள்ள மடத்துவிளாங்குளம் உடைப்பெடுத்தமையால் அந்தக் குளத்தின் கீழ் உள்ள 82.84 ஏக்கர் விவசாய நிலம் நீரில் முழ்கியுள்ளது.
அத்தோடு, வவுனியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து குளக்கட்டில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அந்தப் பகுதிக்கான வீதிப் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.
குளம் உடைப்பு
குறித்த குளமானது நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் இருந்துள்ளதுடன், விவசாயிகளே சிறிய திருத்த வேலைகளை கடந்த காலத்தில் செய்திருந்தனர்.

தற்போது குளம் உடைப்பெடுத்து பாய்ந்து வருவதனால் அதன் கீழான நெற்செய்கை பாதிப்படைந்துள்ளது.
குறித்த குளத்தின் உடைப்பை கட்டுப்படுத்த இராணுவத்தினர் கமக்கார அமைப்பினருடன் இணைந்து முயற்சி செய்த போதும் அது பயனளிக்காத நிலையில் தற்போது தண்ணீர் தொடர்ந்தும் வெளியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri