வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை மீள இயக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை
வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA) மீள இயக்குமாறு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மலரவன், வவுனியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் வி.சுப்பிரமணியம் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுநரை இன்று (25) சந்தித்துக் கலந்துரையாடினர்.
ஆளுநரிடம் கோரிக்கை
இதன்போது, வடக்கு மாகாண சபை இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குவிய மையத்தை (focal point) உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
இந்தநிலையில், குறித்த விடயத்தினை சாதகமாக ஆராய்வதாக ஆளுநர் உறுதியளித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam