வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே இன்று 286.51 ரூபாவாகவும், 295.51 ரூபாவாக பதிவாகியுள்ளது.
ரூபாவின் பெறுமதி
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை (22) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது 286.44 ரூபாவாகவும், 295.45 ரூபாவாக காணப்பட்டிருந்தது.
மத்திய கிழக்கு நாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ள அதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam