டக்ளஸூக்கு எதிரான கைது உத்தரவு! இன்று நீதிமன்றில் முன்னிலை
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க முன்னிலையாகாத காரணத்தினால் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு(Douglas Devananda) எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மீளப்பெறப்பட்ட பிடியாணை
இந்த நிலையில், இன்றையதினம் தனது சட்டத்தரணிகளின் ஊடாக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து அவருக்கு எதிரான பிடியாணை உத்தரவை நீதிமன்றம் மீளப் பெற்றுள்ளது.

2016 ஆம் ஆண்டு, தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 02 காசோலைகளை வழங்கியமை தொடர்பில், வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக டக்ளஸ் தேவானந்தா வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கொழும்பு நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த வழக்கு தவணைக்கு முன்னிலையாக தவறியமையால் அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மருத்துவ காரணங்களால் தாம் வழக்குத் தவணைக்கு முன்னிலையாகவில்லை என்றும், மருத்துவச் சான்றிதழ்களையும் நீதிமன்றத்திற்கு டக்ளஸ் தேவானந்தா இன்று சமர்ப்பித்திருந்தார்.
இதன்படி, அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு மீளப் பெறப்பட்டுள்ளது.
பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி... ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ Cineulagam
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri
Bigg Boss: ரெட் கார்டுடன் வெளியேறும் பாரு, கம்ருதின்... விஜய் சேதுபதியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம் Manithan